மாஞ்சோலை தேயிலை தோட்டம்: `டான் டீ நிர்வாகத்துக்கு வழங்க இயலாது..!’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் | Mancholai tea estate cannot be handed over to tan Tea management – TN government

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு எடுத்து நடத்த இயலாது. தேயிலை தோட்டத்தை டான் டீ நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது” என வாதிட்டார். மேலும், “மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம்.” என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ”தமிழக  அரசு மற்றும் டான் டீ நிர்வாகம் ஆலோசித்து இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது. தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 25-வது ஆண்டு நினைவஞ்சலி நெல்லை தாமிரபரணி நதியில் நேற்று (23-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “அரசின் பார்வையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்த கோளாறு இருக்கிறது. 

தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள்தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள்

தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள்

இன்னமும் சரியான புரிதல் தமிழக அரசுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு புலியை வளர்ப்பது ஏன்? எலியை வளர்ப்பது ஏன்?  இந்த விவகாரத்தில் அரசு மிகவும் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ஏனோ தானோ என்று முடிவு எடுக்கக் கூடாது.” என தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *