மாநிலங்களவையில் குறைந்த என்.டி.ஏ பலம்… சிக்கலில் பாஜக! – கைகொடுக்குமா அதிமுக?! | BJP strength in rajya sabha reduced to 86, will admk help?

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்குமா என்பது தெரியவில்லை. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

மோடி - ஜெகன்மோகன் ரெட்டிமோடி - ஜெகன்மோகன் ரெட்டி

மோடி – ஜெகன்மோகன் ரெட்டி

இந்த நிலையில், பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், கே.சி.ஆரின் மகனுமான கே.டி.ராமராவ் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர்களுக்குள் ஏதாவது மறைமுக உடன்பாடு ஏற்பட்டால், பி.ஆர்.எஸ் ஆதரவு பா.ஜ.க-வுக்கு கிடைக்கலாம். அதேபோல, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு மூன்று எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இப்போது, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். சில மசோதாக்களுக்கு கிடைக்கலாம். சில மசோதாக்களுக்கு கிடைக்காமல் போகலாம் என்ற நிலை தான் உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் பாஜக, மாநிலங்களவையில் தன் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் இடம் பெறாத கட்சிகள் என்ன முடிவெடுக்க போகிறது என்பதில் தான் உள்ளது பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *