இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள், சொந்தமாக வீடு கட்டும்போது, தற்போது நடைமுறையில் உள்ள அரசு தரும் மானிய விலை சோலார் பேனல்களை அமைத்துக் கொள்கிறார்கள்.
இந்த சோலார் பேனல்களில் தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதால் அதிகரித்துவரும் மின்கட்டண பிரச்னைகளில் இருந்து மக்களால் தப்பிக்க முடிகிறது. எனவே, சோலார் பேனல்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
“இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13,560 பயனாளர்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைத்துள்ளனர். மேலும் 10,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.” என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி, ‘பி.எம். சூரியகர் – முப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana)’ என்ற வீட்டு கூரைகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் புதிய திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் சுமார் ஒரு கோடி பயனாளர்களுக்கு சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதை இலக்காக கொண்டிருக்கிறது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும் என்றும் மற்றும் உபரியாகும் மின்சாரத்தை மின் வாரியத்துக்கு விற்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.