சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவர், “மோடி அரசில் புதிய சிந்தனையோ, மாற்றுப்பாதையோ ஏதுவுமில்லை. அமைச்சரவையில்கூட பெரிய மாற்றமில்லை. ஏற்கனவே மக்களை வஞ்சித்தது போலவே இப்போதும் வஞ்சிப்பார்கள். மக்கள் தங்களுக்கு தனிப்பெரும்பான்மை தரவில்லை என்பதை உணராமல் அதே சிந்தனையிலேயே இருக்கிறார்கள். நீட் குறித்து விவாதம் செய்ய நாங்கள் கேட்டும் மத்திய அரசு முன்வரவில்லை. நீட் இந்தியாவிற்கு தேவையில்லை. நீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால்தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாக எந்த அரசும் இதை செய்யவில்லை.
தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கிறது. தொடர் கொலைச் சம்பவங்களும் வருத்தமளிக்கிறது. திடீரென்று 77 ரெளடிகளை அரெஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளாக இந்த ரெளடிகள் இருந்தது காவல்துறைக்கு தெரிந்துதானே இருக்கிறது. கூலிப்படை மூலம் நடைபெறும் கொலைகளை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு.
ஆனால், இதற்கு தீர்வு என்கவுன்டர் கிடையாது. என்கவுன்டரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்படி செய்தால் கூலிப்படைக்கும் காவல் துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88