ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்ம குமாரி அமைப்பினர் ராக்கி கயிறு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, சகோதரிகள் லட்சுமி, மல்லிகா, கயல்விழி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் சந்தித்து கையில் ராக்கி கயிறை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க:
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு : திமுக எம்.பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்
இதேபோல, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரக்ஷா பந்தன் நாளை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும் என்று எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
.
- First Published :