“முதல்ல நீங்க திருந்துங்க, அபராதம் அப்புறம் விதிங்க” சென்னை மாநகராட்சிக்கு எதிராக கிளம்பும் குரல்! | construction waste- chennai corporation warns

சென்னையில், அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொதுஇடங்கள், நீர்நிலை பகுதிகளில் கட்டடக் கழிவுகள் கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். அதன் ஒருபகுதியாக, இரவு நேரங்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள்!தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர்கள்!

இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த 10 நாள்களில் மட்டும் 6,310 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டடக் கழிவுகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக, கட்டடக் கழிவுகள் அடைத்துக் கொள்கின்றன. ஆகவே அனுமதித்த இடங்கள் தவிர பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டடக் கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *