முதல்வர் தொடங்கிவைத்த ரோப் கார் சேவை; 2வது நாளே பிரச்னை – அந்தரத்தில் தவித்த பெண்கள், நடந்தது என்ன? | karur temple rope car isuue, solver after 2.5 hours

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது அய்யர்மலை. இந்த ஊரில் உள்ள மலைக்குன்றில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் படிகள் வழியாக ஏறி மலை உச்சிக்கு சிரமபடுவதால், ரோப் கார் வசதி செய்துதர வேண்டும் என்று பலவருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் எளிதாக மலை உச்சிக்குச் செல்ல ரூ 6.70 கோடி மதிப்பீட்டில் ரோப்கார்(கம்பிவட ஊர்தி சேவை) சேவையானது, பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு பிறகு, கடந்த 24-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இது தவிர, பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ளதை போல பயணிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வரும் வகையில், ரூ. 2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதிகள், கட்டண வசூல் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் கம்பி வட ஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

முதல்நாள் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்டவர்கள் இந்த ரோப் காரில் பயணித்தனர். இதன் பிறகு, மலைக்கோயிலில் உள்ள ரத்தனகிரிஸ்வரர் சாமியே தரிசிக்க முதல் முறையாக கம்பி வட ஊர்தி மூலம் பக்தர்கள் பலரும் கடந்த இரண்டு நாள்களாக, மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

பெண்கள்பெண்கள்

பெண்கள்
தே.தீட்ஷித்

இந்த நிலையில், கோயில் மலை உச்சிக்கு சென்ற கம்பி வட ஊர்தி பெட்டிகள், மேல் இணைக்கப்பட்ட கயிறு பலத்த காற்றின் காரணமாக நழுவியதால் ரோப்கார் நகராமல் நடுவழியில் நின்றது. அப்போது, மலை உச்சியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 8 பேர்கள் பெட்டிகளில் அமர்ந்தவாறு, நடுவழியில் சிக்கித் தவித்தனர். அந்தரத்தில் நின்றதால், அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். அதைப் பார்த்த ஊழியர்கள், “ஒரு அஞ்சு நிமிஷம்தாம்மா. உங்களை பத்திரமாக இறக்கிவிடுவோம்’ என்று சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், 2.30 மணி நேரத்திற்கு பிறகு, ரோப்கார் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மேலாளர் உள்ளிட்ட 8 ஊழியர்களால் சரி செய்யப்பட்டு மூன்று பக்தர்களும் பாதுகாப்பாக இறக்கி கொண்டுவர கடுமையாக போராடினர். அதன் பிறகு, அவர்கள் படிகள் வழியாக இறங்கி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலை உச்சியில் இருந்து நடுவழியில் சிக்கித் தவித்த பெண்கள் மூன்று பேரும் தாங்கள் மரண பயத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சொந்த ஊருக்கு மூன்று பெண்களும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். முதல்வரால் முதல்நாள் திறந்து வைக்கப்பட்ட ரோப் காரில் மறுநாள் பயணித்த பெண் பயணிகள் அந்தரத்தில் சிக்கித் தவித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *