முற்றிய வாக்குவாதம்…பெண் நகர்மன்ற தலைவர் முன் திமுக கவுன்சிலர் செய்த ஆபாச செய்கையால் அதிர்ச்சி | karur municipality dmk issues, video sparks controversy

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியின் தலைவராக இருப்பவர் முனவர் ஜான். அதேபோல், இந்த நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. அவற்றில், தி.மு.க-வைச் சார்ந்த 22 கவுன்சிலர்கள், 5 சுயேச்சை கவுன்சிலர்கள் என 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்தவுடன், நகராட்சி சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்தும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்தும் கணக்கு கூட்டம் வைக்கவில்லை என்பது உள்ளிட்ட விவகாரங்களுக்காக பள்ளப்பட்டி நகர மன்ற தலைவர் முனவர் ஜான் அறைக்கு சென்ற தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

பின்னர், நகர்மன்ற அலுவலகத்தில் இருந்து வெளியேறிய நகர்மன்ற தலைவர் முனவர் ஜானை வழிமறித்த தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் நகராட்சி அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பள்ளப்பட்டி நகராட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் நத்தம் ஜாபர், 9-வது வார்டு கவுன்சிலர் அப்புகாரத்த சாதிக் ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டும் வகையில் உள்ளது.

வாக்குவாதம் செய்யும் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்யும் கவுன்சிலர்கள்

வாக்குவாதம் செய்யும் கவுன்சிலர்கள்
தே.தீட்ஷித்

ஒரு கட்டத்தில் நகர்மன்ற தலைவர் முனவர் ஜான் தி.மு.க கவுன்சிலர்கள் தகராறில் ஈடுபடுவதை தனது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்த போது, 9-வது வார்டு கவுன்சிலர் அப்புகாரத்த சாதிக் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டது அங்கிருந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. .மேலும், இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இதுவரை பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் எந்த புகாரும் அளிக்கவில்லை.

உட்கட்சி மோதல்களை பேசி தீர்த்துக் கொள்வதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் நகராட்சி தலைவர் என்றும் பாராமல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க தலைமை தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி தி.மு.க-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தி.மு.க பெண் நகராட்சி தலைவி முன்பு தி.மு.க கவுன்சிலர் ஒருவர் ஆபாச செய்கை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *