தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருந்தபோதிலும் அணை விவகாரத்தில் ஏதேனும் பிரச்னைகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முல்லைப்பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, 2014 ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் 2022 ஆம் ஆண்டு இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் 5 பேர் கொண்ட குழுவாக மாறியது.