ஜூன் 4-ம் தேதி வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 370 இடங்களுக்கு மேல் பெறும் என்று ஜூன் 1-ம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளை முற்றிலும் பொய்யாகியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க கடந்த இரு தேர்தல்களில் பெற்ற தனிப்பெரும்பான்மையைக் கூட பெறாமல் 240 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், என்.டி.ஏ கூட்டணி 293 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதேபோல், இந்தியா கூட்டணி 234 இடங்களையும், அதில் காங்கிரஸ் 99 இடங்களையும் பெற்றது.
இதற்கிடையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, பா.ஜ.க கடந்த முறையைப் போல 303 இடங்கள் அல்லது அதற்கும் சற்று அதிகமான இடங்களைத் தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். மேலும், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான அன்று, `அடுத்த தேர்தலில் தேவையற்ற பேச்சுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.