ுக்குஅரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, “அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
மூன்றுமுறை எம்.ஏல்.ஏ-வாகி பத்தாண்டுகள் அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால், மதுரையைத் தாண்டினால் என்ன யாருக்கும் தெரியாது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். உலகத்தில் என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அண்ணாமலை ஒருமுறையவது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளாரா?
எம்ஜிஆரின் நூற்றாண்டு நாணய வெளியீட்டின்போது பிரதமர் மோடியை கூப்பிடாததற்கு காரணம், எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் என்பதால்தான். மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மதவாத நிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கும், அதன் காரணமாக பிரதமர் மோடியை எம்ஜிஆரின் நாணய வெளியிட்டு விழாவுக்கு அழைக்கவில்லை. கலைஞரின் நாணயத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது திமுக அரசு, ப்ளாக் டிக்கெட் போன்று அதிக தொகைக்கு விற்பனை செய்கின்றனர்.
நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசி வருகிறார். கடவுளை கண்டவரும் இல்லை, எம்ஜிஆரை வென்றவரும் இல்லை. என்றும் ஒரே தலைவர் எம்ஜிஆர்தான்.
கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றி சிறப்பாக நிர்வாகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுகிறது என்று அப்போது பிரதமர் மோடி பாராட்டினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனையோ புயல்கள் வறட்சிகளை சமாளித்து சிறப்பாக நிர்வாகம் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது உள்ள திமுக ஆட்சியில் இரண்டு புயல்களைக் கூட சமாளிக்க முடியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வந்ததற்கு முழுமையான காரணம் ஜெயலலிதா. பாஜக ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88