“ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பாகிஸ்தான்… விசாரணை நடத்த வேண்டும்" – பிரதமர் மோடி

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சா ஃபவாத் ஹுசைன் (Ch Fawad Hussain) தனது எக்ஸ் பக்கத்தில், ராகுலின் பிரசார வீடியோ ஒன்றை பகிர்ந்து, `Rahul On Fire’ என ட்வீட் செய்திருந்தார். இதை ‘ராகுல் பாகிஸ்தானின் சகோதரர்’ எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வாக்கு செலுத்தியதற்குப் பிறகு அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

ராகுல் காந்தி, கெஜ்ரிவால்

அந்தப் பதிவுக்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, “அமைதியும் நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்” என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், “இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட் தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

ஆனால், இந்த ட்வீட்டுக்குப் பிறகும் அரவிந்த் கெஜ்ரிவல் கடுமையாக பா.ஜ.க-வால் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடமிருந்து ஒப்புதல் கிடைக்கிறதே… ஏன் அங்கிருந்து ஆதரவுக் குரல்கள் எழுகின்றன என்பது எனக்குப் புரியவில்லை. இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மோடி

நான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்னைகளில் நான் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். இது பாரதத்தின் தேர்தல். இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற காரணிகளாலும் பாதிக்கப்படமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *