இந்திரா காந்தி ஆட்சியில் ராணுவத் தளபதி பிவூருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பி.எஸ்.பகத்துக்கு ராணுவத் தளபதியாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது தொடர்பான விவாதங்கள் ராணுவ அதிகாரிகள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
ஆனால், மனோஜ் பாண்டேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான முடிவு, தேசிய அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் இன்னும் நிறைவடையாத நிலையில், ராணுவத் தளபதிவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
AIMIM கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, “தேர்தல் பிரசார காலத்தில் பணியாற்றிய ராணுவத் தளபதியின் பதவிக் காலத்தை அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நீட்டித்தது விரும்பத்தக்கது அல்ல. மோடி அரசாங்கம் அவர் ஓய்வு பெறும் தேதியை நன்கு அறிந்திருந்தது. அதன்படி அடுத்த தளபதியை நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும்.” என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் ஜெயிக்கும், பா.ஜ.க 370 இடங்களில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி தொடங்கி, பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், ‘இந்த முறை பா.ஜ.க வெற்றிபெறாது. 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க-வால் ஜெயிக்க முடியாது’ என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.