நிலமோசடி வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதில் அரசியல் முன்விரோதம் காரணமாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில்,விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு… எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு? – முழு விவரம்!
இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
.