நீலகிரியில் அழிக்கப்பட்ட சோலை மரங்கள் மற்றும் புல்வெளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வசந்த் பாஸ்கோ, “ஊட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மைதானம் இயற்கையான சதுப்பு நிலமாக இருக்கிறது. குதிரை பந்தயத்திற்காக பெரிய அளவிலான புல் மைதானத்தை அப்படியே பராமரித்து வந்துள்ளனர். அரசு தற்போது இந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். அரியவகை நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அளவுக்கு அதிகமான மழை வெள்ளத்தை உட்கிரகித்து மக்களை காக்கும் இந்த புல் மைதானத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும். எந்தவித கட்டுமானத்தையும் எழுப்பக் கூடாது ” என்றார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பெபிதா, “நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் 52.34 ஏக்கர் நிலம், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. குதிரை பந்தைய மைதானத்தில் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மீட்கப்பட்ட பொக்கிஷத் கட்டிக் காக்கும் பொறுப்பை அரசு உணர்ந்து செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb