“விக்கிரவாண்டியில் ஆளுங்கட்சி தோல்வி அடையும்..!” – ஹெச்.ராஜா சொல்லும் காரணம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் 4,700 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக  870 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு நாட்களில் உற்பத்தியானதா இந்த 4,700 லிட்டர் என கேள்வி எழுகிறது.  மதுவிலக்கு போலீஸார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்காது. கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்து போனார்கள். அதில் கைது செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

ஹெச்.ராஜா

தற்போது கைது செய்துள்ள 870 பேரையும் குண்டர் சட்டத்தில்  அடைக்கவில்லை, மக்களை ஏமாற்றுவதற்காகவும் கண்துடைப்பிற்காகவும் தி.மு.க இந்த கைது நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் தி.மு.கவினர்கள்தான். அதனால்தான் அவர்களை இதுவரை போலீஸார்  கைது செய்யவில்லை.  இது விஷச்சாராய அரசாங்கம் என வீடு வீடாகப் பிரசாரம் செய்வோம். கடந்த ஆண்டு 28 பேர் இறந்த பொழுது நடந்ததுபோல  மறைக்கப்பட்டது போலத்தான் இந்த சம்பவமும் மூடி மறைக்கப்படும். அதனால்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டுமென பா.ஜ.க சார்பில் கேட்கப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவையில்லை அது அறிவாலயம் ஏற்பாட்டில் நடைபெறக்கூடியது.

இலவசம் மற்றும் அரசியலில் ஊழலை ஒழிப்பதற்கு அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறிய நடிகர் கமல்ஹாசன் தற்போது அறிவாலயம் வாசலில் நின்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.  அவர் தி.மு.கவின் வழக்கறிஞராகவே  செயல்படுகிறார்.  கள்ளக்குறிச்சி தொகுதியில் நான்கு பூத்களில் அதிக வாக்குகள் தி.மு.கவினருக்குதான் விழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மக்கள் சாவை வரவேற்று விலைக்கு வாங்கியுள்ளார்கள். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களிடம் சென்று பெரிய மாற்றத்தை உருவாக்குவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும். ஆளுங்கட்சி படுதோல்வி சந்திக்கும். நெல்லையப்பர் கோவில் தேரின் வடம் 6 முறை அறுந்துள்ளது.

ஹெச்.ராஜா

பழமையான கோயிலின் தேருக்கு புதிய வடம் கூட வாங்க  முடியாதது இந்து சமய அறநிலையத்துறை. அமைச்சர் சேகர்பாபு உபயோகம் இல்லாத அமைச்சர். அந்த  அதிகாரிகளுக்கு அரசு சார்பில் கொடுத்த சொகுசு கார்களை வாபஸ் பெற வேண்டும்.  முதலில் நெல்லையப்பர் கோவிலின் இணை ஆணையரை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.  கோவில் செயல் அலுவலரை சைக்கிளில் செல்லுங்கள் என சொன்னால்தான் பயம் வரும்.  பல ஆண்டுகளாக மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத்தான் கண்டதேவி ஆலயம் திருவிழா நடைபெற்றதே தவிர தி.மு.கவினரால் கிடையாது.” என்றார்.   

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *