விஜய்யின் GOAT பட ஸ்டிக்கர் ஒட்டியதில் வெட்டுக்குத்து – தமிழக வெற்றிக் கழக நிர்வாகி, மகன்களுடன் கைது | vijay’s goat film sticker clash – tvk executive arrested with sons

அங்குச் சென்ற சி.எம்.செல்வம், ஒன்றியத் தலைவர் கலைச்செல்வத்திடம் சமாதானம் பேசி அனுப்பியிருக்கிறார். அங்கிருந்து ஆத்திரத்தோடு சென்ற ஒன்றியத் தலைவர் கலைச்செல்வம், தனது மகன்களை அழைத்துக்கொண்டு சி.எம்.செல்வத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

`நீ யார் கட்சி விவகாரத்தில் தலையிடுவதற்கு..?’ என்று கேட்டு சி.எம்.செல்வத்தை தாக்கியிருக்கின்றனர். சி.எம்.செல்வத்துக்கு உதவியாக ஓடிவந்த விஜய் என்ற 24 வயது இளைஞனையும் கத்தியால் தாக்கி, இரும்பு கம்பியால் அடித்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தந்தை, மகன்கள்கைது செய்யப்பட்ட தந்தை, மகன்கள்

கைது செய்யப்பட்ட தந்தை, மகன்கள்

தாக்குதலில் இளைஞன் விஜய் படுகாயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகி கலைச்செல்வம், அவரது மகன்கள் சஞ்சய், லிங்கேஸ்வரன் உட்பட 4 பேரை கைது செய்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *