கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. சேகர் பாபு ஆன்மீகத்துக்காகவே பிறந்தவர்.
ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதே போல எங்காவது சிறுபான்மை மாநாடு நடந்தால் அதை முதலமைச்சர் தொடங்கி வைக்காமல் இருப்பாரா. அவர் செல்லாவிடினும் உதயநிதி சென்று தொடங்கி வைத்திருப்பார்.
தவெக கொடியில் இருப்பது வாகை பூவா, தூங்கு மூஞ்சி பூவா என்று தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி யானை அவர்களுக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். சட்டரீதியாக அதில் தவறு இருந்தால், அதை விஜய் கட்சியினர் மாற்றிக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்சி இருக்காது.
விமரிசையாக ஆரம்பித்தாரோ இல்லையோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார். தமிழக பாஜகவில் 42 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
பா.ஜ.க – திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துள்ளது. மாற்று அரசியலை பா.ஜ.க முன்னெடுத்துச் செல்கிறது.
ஒன்றியம் என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டியிருக்கிறது. யாரெல்லாம் பாஜக, இந்து மத கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது என்பதை முதல்வரின் மத்திய என்ற வார்த்தை காட்டுகிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88