வீடு கட்டுவதற்கான வரைப்படக் கட்டண உயர்வு: “திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில்..!” – சீமான் காட்டம் | seeman slams dmk government for building permission cost

அரசுத்துறையில் நீண்டகாலமாக நடைபெறும் இத்தகைய ஊழலை ஒழிக்கத் திறனற்ற தி.மு.க அரசு, தன் பங்கிற்கு வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டிய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பதை வாடிக்கையாகக் கொண்ட தி.மு.க அரசு இப்போது ஏழை – நடுத்தர மக்கள் வீடு கட்டவே முடியாத நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

ஓடாய் தேய்ந்து உழைக்கும் பணத்தை வாடகை செலுத்தியே வாழ்நாளைக் கழித்த தமிழ் மக்கள், தங்கள் தலைமுறையாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகச் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு, வீடு கட்ட முனைந்தால் அதனையும் வரி என்ற பெயரில் வலுக்கட்டாயமாகப் பறிப்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை தி.மு.க அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் கே.என்.நேரு, “ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டணம் இருந்தது. அது அனைத்தையும் சீர் செய்யும் விதமாகவே புதிய கட்டணம் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *