விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை, ஈரோடு கிழக்கில் கூட்டணி கட்சிக்காக 36 அமைச்சர்கள், பட்டியில் அடைத்து வைத்ததுபோல வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தனர். வாக்காளர்களை விடுவிக்கவில்லை என்றால், நானே நேரில் வருவேன் என சொன்ன பிறகு வாக்காளர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்றனர்.
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களைப் பிடித்தது, 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினார்கள். ஆனால், அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது, ஆகவே சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு என தேர்தல்களை பிரித்து பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் நிலக்கோட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள்.
2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, அதுபோலத்தான் மாறி மாறி வெற்றி தோல்விகள் கிடைக்கும், அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது, வெற்றி, தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும்,
2026-ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார்.
பின்பு, மதுரை டாக்டர் சரவணனின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற அவர் வீட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb