வேலூர் மாவட்டத்தில், கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பல `காலாவதி’ கன்டிஷனில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால், பயணிகள் பல்வேறு சங்கடங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர்ப்புற, கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் நடு இருக்கையே காணவில்லை. அந்த இடத்தில், டயர் ஒன்றைக் கயிற்றால் கட்டி வைத்திருக்கிறார்கள். மகளிருக்கான கட்டணமில்லாத பேருந்துகளிலும் இதே நிலைதான் காணப்படுகின்றன.
இந்த நிலையில், பேருந்தில் `பாம்பு’ ஒன்று பிடிபட்டிருக்கும் சம்பவமும், பயணிகளை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊசூர் அருகேயுள்ள கோவிந்தரெட்டிப்பாளையம் கிராமத்துக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்து சேண்பாக்கம் பணிமனைக்கு திரும்பியது. பேருந்து ஓடிகொண்டிருக்கும்போதே முன்பக்க கண்ணாடியில் இருந்து ஓட்டுநர் இருக்கையை நோக்கி ஊர்ந்து வர முயன்றது. இதைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சிக்குள்ளாகி, பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு … கீழே இறங்கி ஓடினார். அப்போது, ஒருவர் தடியால் தாக்கியதில் பாம்பு இறந்துபோனது. `பேருந்தில் பாம்பு எப்படி ஏறியது?’ எனத் தெரியாமல், ஓட்டுநரும், நடத்துநரும் நடுங்கிப் போயிருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88