வேலூர்: `மரணித்தபோதும் வாழ்கிறார்’ – 5 பேருக்கு `மறுவாழ்வு’ கொடுத்த பெண் | brain dead in an accident – female organs donation

பெங்களூரு, குருதுசொன்னஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரின் மனைவி சரஸ்வதி – வயது 56. கடந்த 13-ம் தேதி மதியம் 12.30 மணியளவில், வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகேயுள்ள திருவலம் இ.பி கூட்ரோடு பகுதி வழியாக கணவரோடு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார் சரஸ்வதி. அப்போது விபத்தில் சிக்கியதில், தலையில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், நேற்று இரவு 9.28 மணியளவில் சரஸ்வதிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

பின்னர், சரஸ்வதியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலமாக இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன. `இதயம்’ சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், `நுரையீரல்’ சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், `கல்லீரல்’ ராணிப்பேட்டை சி.எம்.சி வளாக மருத்துவமனைக்கும், `சிறுநீரகங்கள்’ இரண்டும் சென்னை காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. உடல் உறுப்புகள் தானத்தால், 5 பேருக்கு `மறுவாழ்வு’ கொடுத்துவிட்டு மரணித்தபோதும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்’ சரஸ்வதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *