மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க சிவசேனாவும், பா.ஜ.க-வும் முயன்று வந்தன. அப்போது முதல்வர் பதவியை யார் வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதில் சரத் பவார் உள்ளே நுழைந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி அரசு பதவியேற்க வகை செய்தார். அதிலிருந்து சரத் பவார் மீது பா.ஜ.க கடும் அதிருப்தியில் இருக்கிறது. பா.ஜ.க தலைவர்கள் சரத் பவாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அமித் ஷா புனே வந்திருந்த போது, சரத் பவாரை ஊழல்வாதிகளின் பிறப்பிடம் என்று குறிப்பிட்டு பேசிவிட்டு சென்றார். தற்போது திடீரென மத்திய அரசு சரத் பவாருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. சரத் பவாருக்கு பெரிய அளவில் எந்த வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. அதோடு சரத் பவாரும் தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்கவில்லை. அப்படி இருந்தும் பா.ஜ.க அரசு திடீரென இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
இது சரத் பவாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சரத் பவார் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். மேற்கு மகாராஷ்டிரா முழுவதும் தலைவர்களை சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் சரத் பவார் இன்னும் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்கவில்லை.
இது குறித்து சரத்பவார் கூறுகையில், “‘பணிச்சுமை காரணமாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து பேச முடியவில்லை. ஓரிரு நாட்களில் சந்தித்து எதற்காக இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது குறித்து பேசுவேன்”என்றார். இது குறித்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் சொல்ல விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”ஒருபுறம் சரத் பவாரை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மற்றொரு புறம் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரத் பவாரின் சுற்றுப்பயணத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை குறைக்கும் விதமாக இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் கொள்ள செய்கிறது”என்றார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் சரத் பவார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88