ஹெலிகாப்டரில் சென்று காட்டில் இறங்கிய கமாண்டோ படை வீரர்கள் – 6 மணிநேர சண்டையில் 12 நக்சலைட்கள் பலி | 200 commandos who landed in the forest by helicopter: 12 naxalites killed in 6 hours of fighting

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த மாவட்டம் சத்தீஷ்கர் எல்லையையொட்டி இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் தேடுதல் வேட்டையின் போது நக்சலைட்கள் சத்தீஷ்கர் எல்லைக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர். நேற்று பிற்பகல் சத்தீஷ்கர் எல்லையையொட்டிய வன்டோலி என்ற இடத்தில் நக்லைட்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கமாண்டோ படையினர் வாகனங்களில் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மழை காரணமாக வாகனம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. உடனே ரிசர்வ் போலீஸார் ஹெலிகாப்டரில் சென்று இறங்க முடிவு செய்தனர். 200 கமாண்டோ வீரர்கள் ஹெலிகாப்டரில் சென்று காட்டில் இறங்கினர்.

அவர்கள் நக்சலைட்கள் மறைந்திருக்கும் பகுதியை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். உடனே நக்சலைட்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து இருதரப்பினரும் கடுமையான துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இச்சண்டை பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நீடித்தது. இதில் ஒரு அதிகாரி மற்றும் ஒரு கமாண்டோ வீரர் காயம் அடைந்தார். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் உடனே மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். இத்தாக்குதல் முடிந்த பிறகு அப்பகுதியில் கமாண்டோ படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது 12 நக்சலைட்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட 12 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கட்சிரோலி எஸ்.பி. நிலோத்பால் கூறுகையில், “‘துணை கண்காணிப்பாளர் விஷால் தலைமையில் வனப்பகுதிக்குள் சென்ற கமாண்டோ படையினர். 5 மழை நீர் ஓடைகளை கடந்து சென்று சத்தீஷ்கர் எல்லையில் இருந்த நக்சலைட் முகாமை அடைந்தனர். கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால் கமாண்டோபடையினர் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் நக்சலைட்கள் இருந்தனர். ஆனால் குறுகிய நேரத்தில் நக்சலைட்கள் இருக்கும் இடத்தை கமாண்டோ படையினர் அடைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பெண் நக்சலைட் மற்றும் நக்சலைட்களின் முக்கிய பிரமுகர் என 12 பேர் கொல்லப்பட்டனர்” என்றார். கமாண்டோ படையினரின் இச்செயலை பாராட்டு இத்தாக்குதலில் ஈடுபட்ட கமாண்டோக்களுக்கு 51 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *