தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து அண்மையில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த ஜூன் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே நிறைவேற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதையும் படிக்க:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது – அன்புமணி ராமதாஸ்
இதையடுத்து, இந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட மதுவை அருந்தி உயிரிழப்பு ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பனை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
மேலும் அவ்வாறு குற்றம் செய்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
.