இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ”நான்கு சக்கர வாகனத்திற்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட விலையான ரூ.11 லட்சம் மற்றும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகையாக ரூ.1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 என மொத்தம் ரூ.1,10,000-ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
”நுகர்வோர்களின் குறைதீர்ப்பாதற்காக இயங்கி வரும் அமைப்புதான் நுகர்வோர் குறைதீர் ஆணையம். இதன் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டவழியாக நிவாரணம் பெறலாம்.
நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. அனைவரும் கடைகளில் பொருட்களை வாங்கும்போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு பொருள்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டுப் பெற வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்” என்கிறார் ஆணையத்தின் தலைவர் திருநீல பிரசாத்.