இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அ.தி.மு.க கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார் இதற்கும் அ.தி.மு.கவிற்கும் சம்பந்தமில்லை. மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது.
பா.ஜ.க எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பா.ஜ.க புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அ.தி.மு.கவுடன் சேர வாய்ப்புள்ளது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88