பத்ரிநாத் – கேதர்நாத் கோயிலிலிருந்து 228 கிலோ தங்கம் திருடப்பட்டதாக ஜோதிர்மத் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக கடந்த 15-ம் தேதி ஜோதிர்மத் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேதார்நாத்திலிருந்து 228 கிலோ தங்கம் காணவில்லை. கேதார்நாத்தில் தங்க மோசடி நடந்துள்ளது. இனி டெல்லியில் கேதார்நாத் கட்டப்பட்டு மற்றொரு ஊழல் அரங்கேற்றப்படுமா?
கேதார்நாத்தில் 228 கிலோ தங்கம் காணாமல் போனதற்கான உரிய விசாரணை இல்லை. இதற்கு யார் பொறுப்பு? இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையரிடம் கோரிக்கை அளித்தும், அவர் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. முதலில், 320 கிலோ தங்கம் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் அது 228 ஆகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து, 36, 32, 27 கிலோ என குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 27 கிலோ தங்கம் காணாமல் போயிருந்தாலும் அது பிரச்னைதான். தங்கம் எப்படி பித்தளையாக மாறியது?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பத்ரிநாத் – கேதர்நாத் கோயிலின் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய், “கேதார்நாத் தாமில் தங்கம் காணாமல் போனது குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தின் அறிக்கைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தங்கம் திருடப்பட்டது உண்மையென்றால், அந்த உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டுமென அவருக்கு சவால் விடுகிறேன். அவிமுக்தேஷ்வரானந்த் சுவாமி குற்றம்சாட்டுவதற்கு பதிலாக, தகுதிவாய்ந்த அதிகாரியிடம் விசாரணை கோரியிருக்கலாம்.
அவர்கள் மீது நம்பிக்கையில்லையென்றால் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மனுதாக்கல் செய்திருக்கலாம். அதைவிடுத்து, கேதார்நாத் தாமின் கண்ணியத்தை குலைக்கவோ, சர்ச்சையை உருவாக்கவோ அவருக்கு உரிமை இல்லை. சர்ச்சைகளை உருவாக்கவும், காங்கிரஸின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மேலும் அதிகரிக்க இதைச் செய்கிறார் என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88