36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் – யார் இந்த ராம் மோகன் நாயுடு? | Ram Mohan Naidu become the youngest member of the Central Cabinet

ராம் மோகன் நாயுடு படிப்பு முடித்து, சிங்கப்பூரில் தொழிலதிபராக இயங்கினார். ஆனால் 2012- ல் முன்னாள் மத்திய அமைச்சர் கே.யெர்ரன் நாயுடு சாலை விபத்தில் இறந்ததால், ராம் மோகன் நாயுடு இந்தியா வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடந்து, ராம் மோகன் நாயுடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, இரண்டே ஆண்டுகளில், அதாவது 2014-ல் ஸ்ரீகாகுளத்திலிருந்து, 16-வது மக்களவையில் இரண்டாவது இளம் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26.

ராம் மோகன் நாயுடுராம் மோகன் நாயுடு

ராம் மோகன் நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடனான நெருங்கிய தொடர்பு ராம் மோகன் நாயுடுவின் அரசியலில் பெரியளவில் உதவியது. அதனால், ராம் மோகன் நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது, ​​டெல்லியில் நாரா லோகேஷ் உடன் இணைந்து முக்கிய தலைவர்களின் ஆதரவை கோரி தீவிரமாக செயல்பட்டார். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக 2020-ம் ஆண்டு சன்சத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *