`4 ஆண்டுகளில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா?’ – மோடியிடம் கார்கே முன்வைக்கும் 3 கேள்விகள்! | Congress chief Kharge asks 3 questions to Modi after he said 8 cr job opportunities created in 4 years

இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மோடியிடம் இது தொடர்பாக மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து கார்கே தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “மும்பையில் நேற்று நீங்கள் (மோடி) வேலைவாய்ப்புகள் பற்றி பொய் பரப்பிக்கொண்டிருந்தீர்கள். எனவே, National Recruitment Agency (NRA)-ஐ அறிவிக்கும் போது நீங்கள் கூறியதை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மல்லிகார்ஜுன கார்கேமல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

`கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு NRA ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தப் பொதுவான தகுதித் தேர்வின் மூலம், பல தேர்வுகள் நீக்கப்பட்டு பொன்னான நேரம் மிச்சப்படுத்தப்படும். மேலும், இது வெளிப்படைத்தன்மைக்கும் மிகுந்த ஊக்கமளிக்கும்’ என்று 2020 ஆகஸ்டில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது, உங்களுக்கு என்னுடைய மூன்று கேள்விகள்… `(1) கடந்த நான்கு ஆண்டுகளாக NRA ஒரு தேர்வைக்கூட நடத்தாது ஏன்? (2) கடந்த நான்கு ஆண்டுகளில் NRA-க்கு ரூ.1,517.57 கோடி நிதி வழங்கப்பட்டும், இதுவரை ரூ.58 கோடி மட்டுமே செலவிடப்பட்டது ஏன்?

பிரதமர் மோடிபிரதமர் மோடி

பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *