மொத்தமாக இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், கனடாவில் 9 கொலைகளும், அமெரிக்காவில் 6 கொலைகளும், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, கிர்கிஸ்தானில் தலா ஒரு கொலையும் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பின்னர், வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த கீர்த்திவர்தன் சிங், “வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்பைக் கொள்கின்றன” என்று தெரிவித்தார்.