ஒழுக்கமற்ற செயல்கள் செய்ததாக கடந்த ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தாலிபன் அறநெறி அமைச்சகம் வெளியிட்ட அதன் வருடாந்திர செயல்பாடுகள் பற்றிய விவர அறிக்கையில், “ஒழுக்கமற்ற செயல்கள் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் பாதி பேர் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டில் 21,328 இசைக்கருவிகள் அழிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் சந்தைகளில் ஒழுக்கமற்ற மற்றும் ஒழுக்கக்கேடான படங்களை விற்பனை செய்வதிலிருந்து ஆயிரக்கணக்கான கணினி ஆபரேட்டர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கலைக்கப்பட்ட பெண்கள் அமைச்சக வளாகம், அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டிருக்கிறது. பெண்களுக்கேற்ப ஆடை அணியவில்லை என்பதற்காக பல பெண்கள் கைது செய்யப்பட்டு, பல மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா சபையின் அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், தாலிபன் அரசு இந்த குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றது’ என்று குறிப்பிட்டு மறுத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88