Bangladesh: தீவிரமடைந்த இட ஒதுக்கீடு போராட்டங்கள்; நாட்டைவிட்டு வெளியேறினாரா Sheik Hasina? | Bangladesh PM Sheikh Hasina steps down amid unrest, flees to India: Report

அதனால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த டாக்காவில் கவச வாகனங்களுடன் ராணுவப் படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளை முள்வேலிகளால் அடைத்துள்ளனர். இதற்கிடையில், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வங்க தேசத்தைவிட்டு வெளியேறி இந்தியா வந்திருப்பதாக வங்க தேச பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்திருக்கின்றன. மேலும், வங்க தேச ராணுவ ஆட்சி அமலுக்கு வரவிருப்பதாகவும் செய்திகள் அங்கிருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், “பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுடனும் நான் பேசுகிறேன். நாங்கள் இடைக்கால அரசை அமைத்து நாட்டை அமைதியான முறையில் நடத்துவோம்…” என்று வங்கதேச ராணுவத் தளபதி வக்கர் உஸ் ஜமான் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *