அதையடுத்து, குழுவிலிருந்த பலரும் கலைந்து சென்றாலும் சிலர் மட்டும் தாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் எல்லையருகே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இது தொடர்பாக ஊடகத்திடம் பேசிய உள்ளூர்வாசி ஒருவர், முள்வேலிக்கு அருகே கூடியிருந்த குழுவினர் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சியதாகவும், தங்களுக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவங்களை விவரித்ததாகவும் தெரிவித்தார்.
இதுவொருபுறமிருக்க, வங்கதேச ராணுவத்தில் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் ராணுவ உயரதிகாரி மேஜர் ஜியாவுல் அசான் (தொலைத் தொடர்பு நிர்வாகம்) அதிரடியாக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.