Bangladesh: புதிய அரசு பதவியேற்பு; வங்கதேச போராட்ட இளைஞர்கள் கொண்டாடும் `முகமது யூனுஸ்’ யார்?! | History of Muhammad yunus And his oath taking ceremony in banlgadesh

பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போரில் களம் கண்ட வங்கேதச தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் ஷேக் ஹசினாவின் அறிவிப்பால் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. `இட ஒதுக்கீட்டு முடிவை கைவிட வேண்டும், பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும்’ எனக் கோரி மாணவர்கள், எதிர்கட்சியினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் ஹசினாவின் இல்லம் சூறையாடப்பட்டதோடு, அவரின் தந்தையும் வங்கதேசம் உருவாகக் காரணமான ஷேக் முஜிபுர் ரகுமானின் சிலைகளும் உடைத்தெறியப்பட்டன. எல்லைமீறிப்போன போராட்டத்தின் விளைவால் பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு தப்பிவந்து தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா - Sheik Hasinaஷேக் ஹசீனா - Sheik Hasina

ஷேக் ஹசீனா – Sheik Hasina

அந்தநிலையில், வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் ஏற்கெனவே ஹசினா தலைமையில் இருந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய இடைக்கால அரசு பதவியேற்கும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கதேச இந்த நிலையில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர் தலைவர்கள், எதிர்கட்சியினர், கலிதா ஜியா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அந்தவகையில், போராட்டகாரர்கள் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட ராணுவம், வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை அறிவித்தது.

முகமது யூனுஸ் முகமது யூனுஸ்

முகமது யூனுஸ்

இந்தநிலையில், பிரான்ஸிலிருந்து வங்கதேசத்திற்கு திரும்பிய முகமது யூனுஸ், வங்கதேச அதிபரையும், ராணுவ தளபதியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், புதிய இடைக்கால அரசில் மாணவர் போராட்ட அமைப்பினர், பெண்கள், மத சிறுபான்மையிர் ஆகியோர் அடங்கிய 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்தார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு வங்கதேச அதிபர் இல்லத்தில் புதிய இடைக்கால அரசு பதவியேற்கும் விழா நடத்தப்பட்டது. வங்கதேச அதிபர் சஹாபுதீன் பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க, வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக, தலைமை ஆலோசகராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் முகமது யூனுஸ். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *