500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு. இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது? ஆண்டு வாரியாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் உயர்ந்தன?
டாப் 100 நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உயரவே இல்லை என தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் கூறினாரே, அந்த நிலைமை மாறிவிட்டதா? இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா?
பீகார், ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு., பத்து ஆண்டுகளாக அம்மாநிலங்களை எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா?
உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டிவிடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ?
தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே? நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே?
ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு ரூ 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு., ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி-யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா? எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர்ந்தால் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்…?” என்று கூறியுள்ளார்.