CBSE Recruitment: `இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு மீண்டும் அநீதி’ – சு.வெங்கடேசன் | Su venkatesan requests central education minister regarding cbse recruitment

பிரிவு ஏ உதவிச் செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள்.

தர்மேந்திரா பிரதான்தர்மேந்திரா பிரதான்

தர்மேந்திரா பிரதான்

பிரிவு பி இளநிலை மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240-ல் இந்தி மற்றும் ஆங்கில மொழியுடன் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.

இது, இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைப்பதுடன் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்றக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *