Chennai: சென்னை மாநகருக்கான சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க 22 அதிகாரிகள் கொண்ட குழு..! | Coordinating Committee for the Chennai city freight transport

*ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகள்…

இதனை பரிசீலித்த தமிழக அரசு, சியுஎம்டிஏ கண்காணிப்பின் கீழ், சென்னை நகர சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அனுமதியளித்தது. 

இந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சியுஎம்டிஏ-ன் தலைவரும், குழுவின் உறுப்பினர்களாக டிட்கோ மேலாண் இயக்குனர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளின் இணை ஆணையர்கள், சென்னை வடக்கு போக்குவரத்து மற்றும் தெற்கு போக்குவரத்து இணை ஆணையர்கள், சென்னை துறைமுக பொறுப்புக்கழக துணை தலைவர் உட்பட 22 அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 6 மாதங்களில் இது குறித்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

அதோடு சரக்கு போக்குவரத்து கூட்டமைப்புகளின் உறுப்பினர்கள், நிபுணர்கள், சரக்குகளை வைப்பதற்கான கிடங்குகள் அளிப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள் போன்றார் இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள். இந்த குழுவின் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் எனவும், தேவைப்படும் நேரங்களிலும் கூட்டம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *