CJI தலைமையிலான சிறப்பு லோக் அதாலத்; 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு ஒரே வாரத்தில் தீர்வு! | Lok Adalat aims to bring justice to every home says DY Chandrachud.

உச்ச நீதிமன்றம் 75-வது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ஒருவார கால லோக் அதாலத் எனும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தியது. உச்ச நீதிமன்ற வழக்குகளை தீர்ப்பதற்காக, உயர் நீதிமன்றங்களில் நடத்தப்படும் இந்த லோக் அதாலத் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமுக தீர்வு காணவும், மக்களுக்கு நியாயமாகவும், அதே நேரம் விரைவாகவும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படுகிறது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் ஆலோசனையின் அடிப்படையில், முதன்முறையாக ஒரு வார கால சிறப்பு லோக் அதாலத் நடத்துவதற்கு, ஏழு நீதிமன்றங்கள் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த லோக் அதாலத் மன்றம், மாவட்ட, மாநில நீதி மன்றங்களுடன் இணைந்து, நீதிபதி சந்திரசூட் தலைமையில் மதியம் இரண்டு மணிக்கு மேல் நடத்தப்பட்டது. 4,880-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த மக்கள் மன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *