நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனால் நீட் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையில், வினாத்தாள் கசிவால் தேர்வின் புனிதம் முழுமையாக மீறப்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லையென்றும், நீட் மறுதேர்வு கிடையாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
ஆனால், இவற்றுக்கிடையில் நேற்று இந்த விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கோபப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. முன்னதாக விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை, அதே தரப்பின் மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா உரையாற்றும் போது குறுக்கிட்டார். அப்போது, வழக்கறிஞர் ஹூடா முடித்ததும் தங்கள் வாதத்தைத் தொடரலாம் என சந்திரசூட் கூறினார்.
அதற்கு நெடும்பாறை, `இங்கிருக்கும் அனைத்து வழக்கறிஞர்களிலும் மூத்த வழக்கறிஞர் நான் தான். என்னால் பதிலளிக்க முடியும். நான் தான் அமிகஸ் (Amicus)’ என்றார். அதைத்தொடர்ந்து, தான் எந்த அமிகஸஸையும் நியமிக்கவில்லை என்று சந்திரசூட் கூற, `நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், நான் வெளியேறுவேன்’ என்று நெடும்பாறை தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த சந்திரசூட், `மிஸ்டர் நெடும்பாறை நான் உங்களை எச்சரிக்கிறேன். அமர்வில் இவ்வாறு பேசக்கூடாது. நான் நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கிறேன். செக்யூரிட்டியை அழையுங்கள், அவரை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்றார். அதற்கு, `நான் கிம்புகிறேன்’ என்று நெடும்பாறை தெரிவிக்க, `நீங்கள் அதைச் சொல்ல வேண்டியதில்லை, வெளியேறலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட நான் அனுமதிக்க முடியாது” என்றார் சந்திரசூட்.
இருப்பினும் இதோடு நிற்காத நெடும்பாறை, `1979 முதல் இதை நான் பார்த்து வருகிறேன்’ என்று கூற, `இன்னும் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என்று சந்திரசூட் எச்சரித்தார். அதையடுத்து வெளியேறிய நெடும்பாறை நீதிமன்றத்துக்குத் திரும்பிய பின்னர், `மன்னிக்கவும், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டது’ என்று சந்திரசூட்டிடம் தெரிவித்தார்.
அப்போது, பைபிள் வசனத்தைக் குறிப்பிட்ட, `இவரை மன்னியுங்கள். ஏனென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது’ என்று சந்திரசூட் கூறினார்.
இவ்வாறு, நெடும்பாறையிடம் சந்திரசூட் கோபப்படுவது இதுவொன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்னர் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போதும், இதேபோன்ற காரசார விவாதம் அரங்கேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88