அந்த வீடியோவில் மும்பை பா.ஜக செய்தித் தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் கரம்ஷி நகுவாவை விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சுரேஷ் கரம்ஷி நகுவா, யூடியூபர் துருவ் ராட்டி தன்னை வன்முறையாளர் என குற்றம்சாட்டியதன் காரணமாகப் பல கேலிகளை எதிர்கொண்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் பெற்றுதர வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 19 அன்று, இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
Dhruv Rathee: பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கு; யூடியூபர் துருவ் ராட்டிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்! | Delhi court issued summon to YouTuber Dhruv Rathee
