Doctor Murder: `போலீஸால் முடியாவிட்டால் CBI-யிடம் ஒப்படைப்போம்’- பெண் மருத்துவர் கொலை வழக்கில் மம்தா | If the Police are unable to solve this then we will hand it over to CBI, mamata said in doctor murder case

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரும், மருத்துவம் முதுகலை இரண்டாமாண்டு மாணவியுமான ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று சடலமாக மீட்கப்பட்டார். இதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கொல்கத்தாஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கொல்கத்தா

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இந்த விவரத்தைக் கூறியதையடுத்து, கடந்த மூன்று நாள்களாக மேற்கு வங்கம், டெல்லி என பல இடங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நீதிவேண்டியும், குற்றவாளியைத் தூக்கிலிடவேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபக்கம், பா.ஜ.க-வை சேர்ந்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்திவந்தார்.

பாலியல் வன்கொடுமைபாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இன்னொருபக்கம், ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் இன்று பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், குற்றவாளி நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறி போலீஸ் குழு ஒன்றை விசாரணைக்கு அமைத்த முதல்வர் மம்தா பானர்ஜி, போலீஸால் முடியாவிட்டால் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதாக இன்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *