மேற்குவங்க மாநிலத்தின் ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி கடந்த வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என போராடி வருகின்றனர். இந்த விவகாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதியில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது, மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுகேந்து சேகர் ரே (75) மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்குகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களைப் போல எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. எனக்கும் மகளும் பேத்தியும் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து, நாளை நான் போராட்டக்காரர்களுடன் இணையப்போகிறேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போதும். ஒன்றுபட்டு எதிர்ப்போம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தயவுசெய்து என் பதவிப் பற்றியோ, என் விதியைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம். ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் இரத்தம் என் நரம்புகளில் ஓடுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88