இந்திய ரிசர்வ் வங்கி 12.06.2024 புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 07, 2024 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.35.87 லட்சம் கோடியாக இருந்தது. நடைமுறை சிக்கல்கள் காரணமாக மத்திய அரசு மே 2023-ல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொண்டபோதிலும், புழக்கத்தில் உள்ள நாணயத்தின் மதிப்பு சற்றே குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 75.1 விழுக்காடு புழக்கத்திலுள்ள பணத்தின் வளர்ச்சி, ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால், 2023-2024-ல் 7.8 சதவிகிதத்தில் இருந்து 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி செலவுக்கும், புழக்கத்தில் உள்ள ரூபாய் மதிப்பிற்குமிடையே மிக நேர்த்தியான தொடர்பைக் காட்டுகின்றது. ஆனால் தற்சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இந்த சமநிலையின்மை ஏற்படுவதாகவும், இதனால் செலவிற்கும் இருப்பிற்கும் இடையேயான இணைப்பு வலுவிழந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொற்றுநோய், நிச்சயமற்ற தன்மை, பணமதிப்பிழப்பு, பொருளாதார மந்தநிலை மற்றும் ஏற்ற இறக்க செயல்முறைகள் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவற்றால் GDP விகிதம் சீராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்தோடு “முந்தைய சில தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதால், புரொமோசன் செலவுகள், விளம்பரங்கள், இன்ன பிற செலவுகள் என இத்தேர்தலுக்கு செய்யும் செலவின் தொகை, கடந்த தேர்தலைக் காட்டிலும் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது” என ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb