Emergency: `இந்தியாவில் அவசர நிலை பிரகடனமும் இருளில் தத்தளித்த தேசமும்!’ | Re-Share | An article on Emergency and its effects

அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவருவது தொடர்பான வழக்கு ஒன்றில், “குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் என்பது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இருந்துவருகிறது. அதைப் பறிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு என்றுமே கிடையாது” என அரசுக்கு எதிராக நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா (H.R.Khanna) தீர்ப்பளித்தார்.

இந்திரா காந்தி, தனது 20 அம்சத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், அவை மக்களைக் கவரவில்லை. நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட்டுகள் ஏ.கே.ஜி., சோம்நாத் சாட்டர்ஜி, தி.மு.க-வின் செழியன் போன்றோர் ஆற்றிய உரைகளைத் தேடி வாசித்தால், அன்றைய நிலையை முழுமையாக உணரும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்.

`1977, ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளிவந்தபோதுதான், மக்களின் முகங்களில் புதிய நம்பிக்கையின் ஒளி தென்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் இந்திரா காந்தி ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கோரினார். தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் தோல்வியடைந்தார்கள். ஜனதா கட்சி, ஒன்றிய அரசை அமைத்தது. புதிய அரசு, தனது முதல் உத்தரவாக அவசரகாலத்தை ரத்துசெய்தது. ஒருவழியாக அவசரநிலை, 1977 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

`அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி’ என்ற சாமுவேல் ஜான்சனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சர்வாதிகாரிகள் உலகம் முழுவதும் பல்வேறு காலங்களில் நிரூபித்திருக்கிறார்கள். அப்படியான ஹிட்லர், முசோலினி தொடங்கி எந்தச் சர்வாதிகாரியுமே ஆட்சிக்கட்டிலில் வெகுநாள் நீடித்ததில்லை என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. உலகம் முழுவதும், எப்போதெல்லாம் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள் புது ரத்தம் பாய்ச்சிக்கொள்கின்றன. அவை சர்வாதிகாரத்துக்கு எதிராக வலிமையாகச் சவால்விடுகின்றன!

போராட்டங்களின் கதை – முழுத்தொடர்..! – க்ளிக் செய்க

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *