France: பிரான்ஸ் தேர்தல் முடிவுகளில் இழுபறி; முடிவெடுப்பதில் நிலவும் சிக்கல்கள் – அடுத்தது என்ன?! – There is going to be a hung parliament in france

இந்த குழப்பமான சூழலில், அடுத்த அதிபர் யார் என்பது தெரியவில்லை. தொங்கு நாடாளுமன்றம் போன்ற ஒரு சூழலை பிரான்ஸ் நாடு சந்திப்பது இதுவே முதன்முறை.பிரான்ஸ் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாரீஸ், நான்டெஸ், லியோன் உள்பட பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தேர்தல்பிரான்ஸ் தேர்தல்

பிரான்ஸ் தேர்தல்

கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் தொடங்கும் என்றும், அது தொடர்பான ஆலோசனைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, தீவிர இடதுசாரி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று அதிபர் மேக்ரான் அறிவித்திருக்கிறார். எனவே, மிதவாத இடதுசாரி கட்சிகளைக் கூட்டணிக்கு அவர் அழைக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், மிதவாத இடதுசாரி கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்தாலும், கொள்கை முடிவுகளை எடுப்பதில் அந்தக் கட்சிகளின் கருத்துக்களுடன் இணைந்தே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனவே, கூட்டணி அரசு குறித்து அதிபர் மேக்ரான் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆக, பிரான்ஸில் புதிய அரசு அமைவதற்கு இன்னும் சில காலதாமதங்கள் ஏற்படும் என்றே தெரிகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *