Hindenburg Report: `தனிப்பட்ட லாபத்துக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!’ – அதானி குழுமம் | Adani Group rejects Hindenburg’s new allegations

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், “அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது” எனக் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக செபி விசாரித்து வந்த நிலையில், செபியின் விசாரணை நேர்மையாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது.

அதானி - Adaniஅதானி - Adani

அதானி – Adani
Adani

அதில், “ செபியின் அதிகார வரம்பில் ஓரளவுக்கு மேல் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. தவிர, ஒரு வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வலுவான நியாயங்கள் தேவை. அந்த வகையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை. இந்தவழக்கை செபியே தொடர்ந்து விசாரிக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *