கனத்த இதயத்துடன், அதே சட்டமன்றக் கூட்டத்தில் நான் சொன்னேன் “என் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்றிலிருந்து தொடங்கப்போகிறது. ஒன்று, அரசியலிலிருந்து ஓய்வுபெறுவது. இரண்டாவதாக, எனக்கென்று தனி அமைப்பை உருவாக்குவது. மூன்றாவதாக, இந்தப் பாதையில் எனக்கு ஒரு துணை கிடைத்தால், அவருடன் மேலும் பயணிப்பது’ ” என்று ட்வீட் செய்து, கட்சியிலிருந்து விலகப்போவதைக் கிட்டத்தட்ட உறுதிசெய்தார். இந்த நிலையில், அரசியலில் ஓய்வுபெறப் போவதில்லையெனவும், புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் சம்பாய் சோரன் அறிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில் இதனைத் தெரிவித்த சம்பாய் சோரன், “அரசியல் ஒய்வு அல்லது தனி அமைப்பு அல்லது நண்பர் என்று மூன்று சாய்ஸ் முன்பு குறிப்பிட்டிருந்தேன். எனவே, அரசியலில் நான் தற்போது ஓய்வுபெறப் போவதில்லை. புதிய கட்சியை அமைத்து வலுப்படுத்தப் போகிறேன். ஒருவேளை இந்தப் பயணத்தில் ஒரு நண்பரைக் கண்டால் அவரோடு பயணிப்பேன்” என்றார். மேலும், விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத்துக்குள் புதிய கட்சி சாத்தியமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, “அது உங்களுடைய பிரச்னை அல்ல. ஒரே நாளில் 30,000 முதல் 40,000 தொண்டர்கள் வரமுடியும் எனும்போது, புதிய கட்சி ஆரம்பிப்பதில் எனக்கென்ன பிரச்னை. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும்” என்று சம்பாய் சோரன் பதிலளித்தார்.