Julian Assange: ஜூலியன் அசாஞ்சே விடுதலைக்குப் பின்னால்… ஒரு ரீவைண்டு பார்வை! | Wikileakes founder Julian assange has been released from jail… a rewind story

ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் அமெரிக்கா ஈடுபட்டது தொடர்பான ஆவணங்கள் விக்கிலீக்ஸில் வெளியிட்டு, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அசாஞ்சே. அதனால், அமெரிக்கா தேசத்தின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார். ஆனாலும், விக்கிலீக்ஸில் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் கசியவிடப்படுவது நின்றபாடில்லை.

அசாஞ்சேவின் திருமணப் புகைப்படம் அசாஞ்சேவின் திருமணப் புகைப்படம்

அசாஞ்சேவின் திருமணப் புகைப்படம்

அமெரிக்காவின் ரகசியங்கள் நிறைந்த 250,000 ஆவணங்கள் விக்கிலீக்ஸில் கசிந்தன. குறிப்பாக, ஈரான் நாட்டை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா திரைமறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் எல்லாம் அப்போது விக்கிலீக்ஸில் கசியவிடப்பட்டன. அதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு அசாஞ்சே ஆளானார்.

52 வயதாகும் அசாஞ்சே ஏற்கெனவே இங்கிலாந்தில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டதால், அமெரிக்கா அவரை விடுதலை செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலையானவுடன், அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருக்கிறார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *