Kanchanjunga Express Collide: `ரயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் பற்றி கவலையில்லை!’ – மம்தா காட்டம் | Railway Ministry do not care about passengers, Mamata Banerjee said in Kanchanjunga Express Collide

விபத்து தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய மம்தா பானர்ஜி, “ரயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் பற்றி கவலையில்லை. ஏன்… ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பொறியாளர்கள், ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிலாளர்கள் பற்றிகூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களும் சிக்கலில் இருக்கின்றனர். அவர்களுக்கான பழைய ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

இன்னொருபக்கம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில்வே விபத்துகள், மோடி அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கின் நேரடி விளைவு. இதனால் நாள்தோறும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகள் பறிபோகிறது. இதற்கு இன்றைய விபத்து மற்றுமொரு உதாரணம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இந்த அப்பட்டமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் மற்றும் இந்த விபத்துகளுக்கு மோடி அரசைப் பொறுப்பேற்கச் செய்வோம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *